துறைமுக அதிகார சபையின் இரண்டு கப்பல்களில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படவில்லை என பொறுப்புடன் கூறுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பணம் பெறப்பட்ட விதம் மற்றும் அதற்கான அனைத்துப் பற்றுச்சீட்டுகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனவும் அவ்வாறான அறிக்கையை வெளியிட்ட துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (12) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

