வெள்ளத்தில் சிக்கி சீமெந்து, மாவு லொறிகள் விபத்து ; 600 சீமெந்து மூடைகள் நாசம்

163 0

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட 600 சீமெந்து மூடைகளும் நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாழைச்சேனையில் மாவு ஏற்றிச் சென்ற லொறியொன்றும் வெள்ளத்தில் சிக்கியதில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

விபத்துக்குள்ளான லொறியில் உள்ள மாவை மற்றுமொரு லொறிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.