உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நோய்வாய்ப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
விமல் வீரவங்ச நேற்று மாலை முதல் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவங்ச சராசரியாக உணவு உற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையல் அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்ல சிறைச்சாலை திணைக்களம் அனுமதி கோரியது.
இதனை மறுத்துள்ள மருத்துவமனை, அவர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

