பட்டதாரிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் – கிழக்குமாகாண முதலமைச்சர் கோரிக்கை

234 0

பட்டதாரிகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை அதே மாகாணத்திலுள்ள வெற்றிடங்களுக்காக உள்வாங்குவதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளித்ததை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஆர்ப்பாட்டங்களோ, எதிர்ப்பு நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படாத ஒரு சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கிழக்குமாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.