கிண்ணியாவில் ஒருவர் தற்கொலை

133 0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில்  டைனமைட்டை வெடிக்கச் செய்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய யுனைதீன் ரபாய்தீன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏழு புளிடியாளியில் வசித்து வந்த இவரின்  மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக குவைத்துக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்து ஐந்து நாட்களேயான  நிலையில், இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதனையடுத்தே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.   மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.