நீதிபதிக்கு சுகயீனம்: டயானா கமகேயின் மனு விசாரணை ஒத்திவைப்பு!

161 0

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை நீக்க மேற்கொண்ட   தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவிடக்கோரி இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (10) நடைபெறவிருந்தது.

இந்நிலையில் நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க சுகயீனமடைந்துள்ளதால்   மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்  இன்று தீர்மானித்துள்ளது.

இதன்படி, மனு மீதான விசாரணையை பெப்ரவரி 9ஆம் திக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்தது.