இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவராவார்.
இவர் நேற்று செவ்வாய்க்கிழமை (9) கல்கிஸை பீரிஸ் வீதியில் பஸ் நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் அவரை விசாரித்த போது சந்தேக நபர் உரிய பதிலளிக்காததால் பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் தனது காற்சட்டையில் அணிந்திருந்த பெல்ட்டை பயன்படுத்தி பொலிஸ் கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

