ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025 -
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் மலர்வளையம் வைத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தெரிவித்துள்ளனர்.யாரோ அல்லது குழுவொன்று குடும்ப உறுப்பினர்களை வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து அச்சுறுத்தி அவமானப்படுத்தியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் பவித்ரா ஜயந்திகா ரம்புக்வெல்ல குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறையான விசாரணையை ஆரம்பித்து, சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குருந்துவத்தை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் அலோகா பி. சேனாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள கொழும்பு 7 பகுதியின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சார்ஜன்ட் ராஜபக்ஷ தனது பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.