இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அநுராதபுரம் – கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி என்ற நபராவார்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

