இந்தியன் இர்கான் சர்வதேச நிறுவனத்தால், பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்தின் சேவைகளின் கீழ் இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழு திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
128 மீற்றர் தூரத்தை உள்ளடக்கிய இத்திட்டத்தின் முழு நிர்மாணப் பணிகளும் இவ்வருடம் ஜூன் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளதோடு, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பிரிவின் கீழ், 65 கிலோமீற்றர் தூரம் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கராலயத்தின் முதல் செயலாளர் இரினா தாக்கூர், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், ரயில்வே பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள், நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான இந்தியன் இர்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

