இலஞ்சம் கோரி குற்றச்சாட்டில் கைதான முகாமைத்துவ உதவியாளருக்கு விளக்கமறியல்!

121 0

அரச வாகனம் ஒன்றை  திருத்தியமைப்பதற்கான  செலவில் பத்து சத வீதத்தை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான   உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரை  எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சின் வாகனம் ஒன்றை பழுதுபார்ப்பதற்காக தலபத்பிட்டியவில் உள்ள வாகனம்  திருத்தும் நிலையம் ஒன்றுக்கு வழங்கப்படவிருந்த 3,12750.00 ரூபாவில் பத்து சதவீதமான  32,000.00 ரூபாவை  இலஞ்சமாக கோரியதாக குற்றச்சாட்டப்பட்டு இவர்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தான் இவ்வாறு  இலஞ்சத்தை  ஒருபோதும் கேட்கவில்லை என சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.