தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி துறைமுக தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்த 12 மணிநேர அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மேலும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி சாமரி வீரசூரிய, பிரதிவாதிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்து, தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

