162 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் வட கடலின் 6 இந்தியர்கள் கைது

244 0

ஹெரோயின் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 13.5 கிலோ கிராம் ஹெரோயினும் அவர்கள் பயணம் செய்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 16.2 கோடி ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.