கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

228 0

கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கொடுக்கும் பணி கொடுக்க கூடிய ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் அதில் ஒப்புக்கொண்டப்படி கூலி நிர்ணயம் என்பது கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இதுவரை கொடுக்கப்படாததை கண்டித்தும் மீண்டும் தற்போது 2017-ல் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் நாள் ஒன்றிற்கு 22 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது.