கோழி இறைச்சி விலை குறைப்பு

166 0

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 40  ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார  மத்திய நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20  ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவாகவும், கறிக் கோழி இறைச்சியின் விலை 1,000 ரூபாவாகவும் மற்றும் தோல் உரித்த கோழி இறைச்சியின் விலை 980 ரூபாவாகவும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில்  விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 2,000 ரூபாவாகவும்,  ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 3,200 ரூபாவாகவும் விற்கப்படுகிறது.