நாடளாவிய ரீதியில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதிகளில், வீதித் தடைச் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான யுக்திய நடவடிக்கையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாகனங்கள் மூலம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

