திருகோணமலை மாவட்டம் வெருகலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 662 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான ஒழுங்குகளைத் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
உலர் உணவுப் பொருட்களை பொதியிடும் செயற்பாட்டை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் கணபதிப் பிள்ளை சிவானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர்.

