பூஸா சிறைச்சாலையில் இந்திய பிரஜையால் தாக்கப்பட்ட அதிகாரி தரையில் வீழ்ந்தார்!

208 0

பூஸா  சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜை ஒருவர், சிறைச்சாலை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (03) இரவு  மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்த குறித்த அதிகாரியையே சந்தேக நபர் தாக்கியதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

தாக்குதலில் அதிகாரி தரையில் வீழ்ந்ததையடுத்து  கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக  முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.