பூண்டுலோயா விபத்து – 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

213 0

பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 ​பேர் காமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 7.45 அளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். டன்சினன் பகுதியிலிருந்து பூண்டுலோயா நகரத்திற்கு சென்ற வேனொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.