விவசாயிகளை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

251 0

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர் பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 18 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலகாந்தி நேற்று நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.அப்போது பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் போராட்டத்தை கைவிடும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் விவசாயிகள் ஏற்கவில்லை. இன்றும் போராட்டம் தொடர்கிறது.தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர் பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.