காணி விடுவிப்பு அறிவிப்பு வந்தாலும்கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது

452 0

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கோரிய 468 ஏக்கர் காணியும் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்தறை அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.

குரல்


எனினும் காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோன்று பன்னங்கண்டி மக்களின் போராட்டமும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இதேவேளை காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.