பொலிஸ் உத்தியோகத்தரை கல்லால் தாக்கிய “மாளிகாவத்தை அசித” உட்பட 53 பேர் கைது

56 0

பொலிஸ் விசேட சோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தலையில் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச்  செல்ல முயன்ற “மாளிகாவத்தை அசித” என்றழைக்கபடும் போதைப்பொருள் கடத்தல் காரர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசேட சோதனையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“மாளிகாவத்தை அசித” என்றழைக்கபடும் போதைப்பொருள் கடத்தல் காரரிடமிருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு மற்றும் 11,500 மில்லிகிராம் நிறையுடைய ஜஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.