காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில்; ப.சத்தியலங்கம் (காணொளி)

390 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் இன்று கலந்துகொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 36ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட இடத்திற்கு சென்ற வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சருடன் வவுனியா தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது பல தாய்மார் கண்ணீர் விட்டழுது தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.