தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 196 இடங்கள் நுளம்பு வளரும் சூழலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாள் நடவடிக்கையில் நேற்றைய தினம் 04ஆயிரத்து 318 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது ஆயிரத்து 196 இடங்களில் நுளம்புகள் வளர்வதற்கு ஏதுவான சூழல் காணப்பட்டதுடன், 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகளும் காணப்பட்டன.
இதனையடுத்து ஆயிரத்து 57 இடங்கள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீடுகள், கல்விநிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமாணப்பகுதிகள், மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்கள் என 4ஆயிரத்து 318 இடங்களில் சோதனைகள் இடம்பெற்றன.

