வெளிநாடுகளில் வாழும் 30 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய நடவடிக்கை!

32 0

வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் இலங்கையைச் சேர்ந்த  30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

துபாயில் தலைமறைவாக வாழும் 29 பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் பிரான்ஸில் வசிக்கும் ஒரு பாதாள உலக உறுப்பினர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் முற்றாக ஓழிக்கப்படும் எனவும் அமைச்சர் அவர் மேலும் தெரிவித்தார்.