யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் வெள்ள நிவாரணங்கள்.

246 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துபுரம் முறுகண்டியில் வாழ்கின்ற முப்பது குடும்பங்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்களின் அன்பளிப்பாக உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் வேப்பங்குளம் கிராமத்தில் மிகவும் பாதிப்புற்றவர்களில் வறுமை நிலையிலுள்ள 15 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் சொந்தங்களின் நிவாரணப் பொதிகள் 23.12.2023 மாலை 5.30 மணியளவில் பொது இடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இப்பகுதியில் நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதவும் உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தற்காலிக வீட்டில் உள்ளவர்களிற்கு 11 குடும்பங்களுக்கு
மாங்குளம்பிரதேச பனிக்கன்குளம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தினக்கூலி மற்றும் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ளவர்களிற்கான உலர் உணவு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் அன்பளிப்பாக 25 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தேறாங்கண்டல் கிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 20 குடும்பக்களிற்கு அத்தியவசிய தேவைக்காண உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மல்லாவிவடக்குகிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களிற்கு 26/11/2023 ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.