தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது.
தந்தை செல்வாவின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி கிளையின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுசெயலாளர் கே.துரைராஜசிங்கம் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பணிமனையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராஜா, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதவாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

