போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற 34ஆவது மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வெளிநாட்டவர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

