கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!- ஏப்ரல் 6ஆம் நாள்

325 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட ஓடுபாதை ஏப்ரல் 6ஆம் நாள் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவிலும், இந்தியப் பிராந்தியத்திலும் சிறந்த விமான நிலையங்கள் மத்தியில் 5வது இடத்தை நெருங்கியிருப்பதாக விமானநிலையத்தின் தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சிவில் விமான அமைப்பின் பரிந்துரைகளுக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான இந்த ஓடுபாதை நவீனமயப்படுத்தல் நடவடிக்கை மூவாயிரத்து 350 மீற்றர் நீளத்தையும், 15 மீற்றர் அகலத்தையும் கொண்டதாக அமைந்துள்ளது.