மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்

329 0

இலங்கையில் எந்த அளவிற்கு அபிவிருத்தி பொருட்களின் பாவனை அதிகரிக்கின்றதோ அந்த அளவிற்கு மின்சாரமும் வீண்விரயம் செய்யப்படுவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களிடம் சிறந்த வகையில் எவ்வாறு மின்சாரத்தை கொண்டு செல்வது என்பது தொடர்பிலான கூட்டம் கொழும்பில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஒரு காலத்தில் இலங்கையில் குப்பி லாம்புகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகளவில் காணப்பட்டது. ஆனால் இன்று மின்சாரம் இல்லாத வீடுகள் இல்லை என்ற அபிவிருத்தி நிலைக்கு நாம் வந்து விட்டோம்.

 எந்தவொரு சமயத்திலும் மின்சாரத்தினை வீண்விரயமாக்க கூடாது. ஆனால் இன்றளவில் அபிவிருத்தி பொருட்களின் தாக்கத்திற்கு எற்றால் போல மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரிக்கின்றது.மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மீண்டும் குப்பி லாம்புகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம். நீங்கள் சேமிக்காவிட்டாலும் நாங்கள் சேமித்து உங்களுக்கு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.