விமல் வீரவன்சவின் உடல்நிலை வழமைக்கு திரும்பியுள்ளது – தேசிய வைத்தியசாலை

342 0

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்சவின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தமக்கான பிணை அனுமதியைக் கோரி 9 தினங்களாக அவர் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்றைதினம் அவர் பௌத்த பிக்குகளின் கோரிக்கை அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டார்.

தொடர்ந்தும் அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.