சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இரு சிறைச்சாலை அதிகாரிகள் கைது

115 0

போதைப்பொருள், சிகரெட், பீடிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலையின் தொழிற்கல்வி ஆலோசகர் மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய  விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 110 மில்லி கிராம் போதைப்பொருள்  , 2 பிடிகள் , ஒரு சிகரெட்  பெட்டி ,  சிறிய கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.