இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் 54 வயதுடைய இங்கிலாந்து பிரஜையாவார்.இவர் இங்கிலாந்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியின்றி ஆயுதங்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ரிவோல்வர் துப்பாக்கி இவரது பாட்டி இவருக்கு பரிசாக கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

