பலாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 52 பேர் கைது

125 0

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசேட சோதனையில் போதைப்பொருட்களுடன் 52 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் 71 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 550 கிராம் கஞ்சா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.