தீர்வு இல்லாவிட்டால் தொடர் போராட்டம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

129 0

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1 ஆம் திகதி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1ஆம் திகதி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, நாடு விசேட வைத்தியர்கள் உட்பட 1700 இற்கும் அதிகமான வைத்தியர்களை இழந்துள்ளதுடன், 5,000 இற்கும் அதிகமான வைத்தியர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 20 சிறிய வைத்தியசாலைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.