ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில்

152 0

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் பேலியகொடை பொலிஸ்  குற்றப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் காந்தி என்ற 56 வயதுடைய பெண்ணாவார்.

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாலத்துறை பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் 100 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கடந்த 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.