காலி மாத்தறை பிரதான வீதியில் வெலிகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மீன் சந்தையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ள நிலையில், மீன் சந்தை வியாபாரி ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் காயமைடைந்துள்ளனர்.
40 வயதுடைய மீன் வியாபாரியொருவரும் 52 வயதுடைய உதவியாளர் ஒருவர் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வெலிகம வலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

