இலங்கை குடிவரவு திணைக்களத்தினால் ஆயிரத்து 750 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 23 ஆயிரம் பேர் வரையில் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
எனினும் இந்தமுறை ஆயிரத்து 750 பேருக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், கடந்த காலங்களில் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

