நாட்டின் பொருளாதாரம் பழைய கடன்களில் சிக்குண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொடக்கவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2038 ஆம் ஆண்டு வரை மூவாயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன்களாக செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையை தாங்க முடியாத தனி ஆள் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
எனினும் அரசாங்கம் ஒன்றுக்கு அவ்வாறு செய்ய முடியாது.
எனவே கடனை செலுத்தும் வகையில் பொருளாதார கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

