இணையத்தில் போலியான விமர்சனங்களை வெளியிட்டு இலங்கை ஹோட்டல்களின் நற்பெயரை அழிக்கும் மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் புத்திக பத்திரன கூறுகையில், இந்த போலியான விமர்சனங்களால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை ஹோட்டல்கள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிட்டுள்ளது.
“இந்த நிலைமையில் நாம் கவனம் செலுத்தி இலங்கை ஹோட்டல் துறையை காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்று அவர் கூறினார்.

