பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீமுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அஹ்னாப் ஜெஸீம் தனது ‘நவரசம்’ நூல் தொடர்புடைய தீவிரவாத குற்றச்சாட்டுகளில் 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் சிறுவர்களுக்கு மத்தியில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், தனது இலக்கியப் பணியின் மூலம் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் கற்பித்த பாடசாலை மாணவர்களிடம் தீவிரவாத உரைகளை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

