திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் நலன் கருதி செவ்வாய்க்கிழமை (12) மொரவெவயில் சுற்றுலா நீதிமன்றம் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.



திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை பிரதான நீதவான் மற்றும் மேலதிக நீதவான் மாவட்ட நீதிபதி உட்பட சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

