வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

390 0

வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்ற சபை அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் வாரியம் ஒவ்வொரு வாரமும் கூடும் நிலையில் மாகாண அமைச்சர்கள் இரு மாதத்திற்கு ஒரு முறையே கூடுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவும் ஒழுங்காக கூடுவதில்லை என்றும் சுட்டிக்காட்டிய எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்காலத்தில் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு ஒழுங்காக கூடாவிட்டால் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் கண்டன போராட்டத்தில் ஈடுபடும் நிலைமைக்கு எம்மைத் தள்ளவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.