கீத் நொயார் விவகாரம்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

240 0

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் உட்பட ஐந்து இராணுவ வீரர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஒலுவருக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைப்படி ஆறு பேரையும் விடுவிக்கும்படி கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த ஆறு பேரும் மற்றொரு வழக்கில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்றைய தினம் இடம்பெற இருந்த சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது.கீத் நொயார் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாவே அடையாள அணி வகுப்பு பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 01ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.