கொலை சதித் திட்டம் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா விடுதலை!

146 0

முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை  விடுவித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் இன்று நீதிமன்றில் அறிவித்தார். இதனையடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.