தெஹிவளை கைவிடப்பட்ட 11 மாடி கட்டிடத்தில் கைக்குண்டு மீட்பு

151 0

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உ ட்பட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள  11 மாடி கட்டிடத்திலிருந்து கைக்குண்டு ஒன்று தெஹிவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

இந்த கைக்குண்டு தெஹிவளை பிரதேசத்தில் அநகாரிக தர்மபால மாவத்தையில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் உள்ள  11 மாடி  கட்டிடத்தின் 5 வது மாடியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தில் நீல நிறத்திலான பொலித்தீன் பையொன்றிற்குள் கைக்குண்டு ஒன்று இருப்பதாக கட்டிட காவலாளி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையில் கைக்குண்டு என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த கைக்குண்டு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.