10 இலட்சம் ரூபா கப்பம் கோரி அச்சுறுத்திய மூவர் கைது!

117 0
பத்து இலட்சம் ரூபா கப்பம் கேட்டு அச்சுறுத்திய மூவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (05)  கைது செய்துள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையின் தலைவர் ஒருவருக்கே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து  கப்பம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  22 கிராம் 970 மில்லிகிராம் போதைப்பொருள், 15 கிராம் 940 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்  கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.