கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு மரண தண்டனை!

139 0

நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்  குற்றவாளிகளாகக் காணப்பட்ட  இருவருக்கு மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட கண்டி  குருபெத்த பிரதேசத்தை சேர்ந்த டி. எம். சமன் குமார திஸாநாயக்க மற்றும்  சமரகோன் பண்டார விஜேகோன் ஆகியோராவார்.

குற்றவாளிகளாக் காணப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்த நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.