வான்பாயும் போது குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் புதுமுறிப்புக் குளத்தில் திங்கட்கிழமை (4) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பருவமழைக்கு குளம் நிரம்பி வான்பாயும் போதும் பெருமளவு மீன்கள் குளத்திலிருந்து வெளியேறி விடுகின்றன இதன்காரணமாக நன்னீர் மீன் பிடி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தமையினை கருத்தில் எடுத்து வான்கட்டு பகுதியில் தடுப்பு வலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் மற்றும் அவர்களது குழுவினர், புதுமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் இணைந்து இ்ப் பணியை மேற்கொண்டனர்.


