இரத்தினபுரி கஹவத்த முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே இவர்கள் கைதாகினர்.
இவர்களிடமிருந்து உரிமம் இன்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி, 19 தோட்டாக்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 16 போர் துப்பாக்கி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 71 வயதுடையதுடைய நபர் ஒருவரும் 41 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

